/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாகனச் சோதனை ரூ.79 ஆயிரம் பறிமுதல்
/
வாகனச் சோதனை ரூ.79 ஆயிரம் பறிமுதல்
ADDED : மார் 23, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராதிகா தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், கண்டப்பங்குறிச்சி பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் ராஜேஷ்குமார், 35, என்பவரிடம் சோதனை செய்தனர்.
அதில், அவர் ரூ.79,665 ஆயிரம் ரொக்கம் ஆவணங்கள் இன்றி பைக்கில் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரி ராதிகா, விருத்தாசலம் துணை தாசில்தார் கோவிந்தனிடம் ஒப்படைத்தார். அப்போது, தேர்தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

