நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான பூங்கொத்து தயாரித்தல் பயிற்சி நடந்தது.
விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கு கொய் மலரில் பூங்கொத்து தயாரித்தல் பயிற்சி நடந்தது. உதவி பேராசிரியர் ஹரிப்பிரியா பயிற்சி அளித்தார். கடலூர், திட்டக்குடி, சிதம்பரம், நெய்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்து பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சுப்ரமணியன் சான்றிதழ்களை வழங்கினார்.