/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு
/
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு
ADDED : மார் 05, 2025 05:00 AM
கடலுார்: கடலுார் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாள்கள் சங்க 2வது மாவட்ட மாநாடு வடலுார் சபை வள்ளலார் வாழ்வியல் மையத்தில் நடந்தது.
செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சென்னை மண்டல செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சந்திரசேகரன் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் சங்க கொடி ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில தலைவர் வரதராஜ், நிர்வாகிகள் பாஸ்கர், சாமிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் பழுதடைந்த நிலையில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ்களை சீரமைத்து பராமரிக்க வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடத்துவது, கடலுார் மாவட்ட ஈ.எம்.ஆர்.ஐ - ஜி.எச்.எஸ் நிர்வாகம் தொழிலாளர்கள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு பி.எப்., ஓய்வூதியம், பணிக்கொடை வழங்காததற்கு கண்டம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.