ADDED : ஆக 06, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு இடி மின்னலுடன் துவங்கிய கனமழை அதிகாலை 3:00 மணி வரை பரவலாக கொட்டித் தீர்த்தது. பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரையில், அதிகபட்சமாக நெய்வேலி வடக்குத்து பகுதியில் 13 செ.மீ., கலெக்டர் அலுவலகம் 9, கடலுார் 8, வானமாதேவி 5, வேப்பூர் 5, காட்டுமயிலுார், பண்ருட்டி, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி, கீழ்ச்செருவாய், விருத்தாசலத்தில் தலா 4, குப்பநத்தம், குறிஞ்சிப்பாடி, மே மாத்துார், காட்டுமன்னர்கோவிலில் தலா 3, தொழுதுார் 2, புவனகிரி, சிதம்பரம், பெலாந்துறை, லக்கூரில் தலா 1 செ.மீ., மழை பதிவானது.