/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபாலில் 13 ஆண்டுகளாக சாதிக்கும் அரசு பள்ளி மாணவிகள்
/
வாலிபாலில் 13 ஆண்டுகளாக சாதிக்கும் அரசு பள்ளி மாணவிகள்
வாலிபாலில் 13 ஆண்டுகளாக சாதிக்கும் அரசு பள்ளி மாணவிகள்
வாலிபாலில் 13 ஆண்டுகளாக சாதிக்கும் அரசு பள்ளி மாணவிகள்
ADDED : ஆக 22, 2024 12:52 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி துாய இருதய மேல்நிலை பள்ளியில், குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
தடகளம், டேபிள் டென்னிஸ், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 52 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், வாலிபால் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவிலும், பீச் வாலிபால் 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவிலும் புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பவல்லி, உடற்கல்வி ஆசிரியர் லதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், தொடர்ந்து 13 ஆண்டுகளாக குறுவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், புதுக்கூரைப்பேட்டை பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.