/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்தில் 1,353 பேர் 'சென்டம்'
/
கடலுார் மாவட்டத்தில் 1,353 பேர் 'சென்டம்'
ADDED : மே 10, 2024 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,353 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
கடலுார் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 440 பள்ளிகளில் இருந்து 16,908 மாணவர்கள், 15,661 மாணவிகள் என மொத்தம் 32,569 பேர் தேர்வு எழுதினர். இதில், 30,169 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாவட்டத்தில் பாடவாரியாக தமிழில் 2 பேர், ஆங்கிலத்தில் 18 பேர், கணிதத்தில் 926 பேர், அறிவியலில் 267 பேர், சமூக அறிவியலில் 140 பேர் என மொத்தம் 1,353 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.