/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்கலம்பேட்டை பேரூராட்சியில் ரூ.1.41 கோடியில் சிமென்ட் சாலை
/
மங்கலம்பேட்டை பேரூராட்சியில் ரூ.1.41 கோடியில் சிமென்ட் சாலை
மங்கலம்பேட்டை பேரூராட்சியில் ரூ.1.41 கோடியில் சிமென்ட் சாலை
மங்கலம்பேட்டை பேரூராட்சியில் ரூ.1.41 கோடியில் சிமென்ட் சாலை
ADDED : செப் 15, 2024 07:03 AM
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 1.41 கோடி ரூபாயில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
மங்கலம்பேட்டை பேரூராட்சியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அண்டகுளத்தார் தெரு, புது நெசவாளர் தெரு, வாணியர் தெரு, பழைய காலனி மற்றும் புதிய காலனி உட்பட 13 தெருக்களில் 1 கோடியே 41 லட்சம் மதிப்பில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. இப்பணி, நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது.
செயல் அலுவலர் மயில்வாகனன், உதவி பொறியாளர் அன்புகுமார் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் சிமென்ட் சாலை பணியை துவக்கி வைத்தார். தி.மு.க., பேரூர் செயலாளர் செல்வம், துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாரி இப்ராஹிம், 3-வது வார்டு கவுன்சிலர் நுாருல்லா, அன்சாரி, முஸ்லிம் லீக் முகம்மது சையது, பொறியாளர் சந்தோஷ், இளநிலை உதவியாளர் ரங்கராமானுஜம், மவ்லவி ஹபீப் முஹம்மது உடனிருந்தனர்.