sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

3 வீடுகளில் 15 சவரன் நகை கொள்ளை திட்டக்குடி அருகே துணிகரம்

/

3 வீடுகளில் 15 சவரன் நகை கொள்ளை திட்டக்குடி அருகே துணிகரம்

3 வீடுகளில் 15 சவரன் நகை கொள்ளை திட்டக்குடி அருகே துணிகரம்

3 வீடுகளில் 15 சவரன் நகை கொள்ளை திட்டக்குடி அருகே துணிகரம்


ADDED : செப் 16, 2024 06:49 AM

Google News

ADDED : செப் 16, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கூடலுார் கிராமத்தை சேர்ந்தவர் அருள்மூர்த்தி, 48; இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு, அவரது மகளை கல்லுாரியில் சேர்ப்பதற்காக சென்னை சென்றார்.

நேற்று காலை அவரது தம்பி அருண்குமார்,42, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது.

அதேபோல், அருகிலுள்ள முருகானந்தம்,56, வேப்பூரில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்றிருந்தார். நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 சவரன் நகை திருடுபோனது.

அதே கிராமத்தைச் சேர்ந்த ஆண்டாள் நகர் சின்னதுரை, 65, என்பவரின் வீட்டில் 2 சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது.

தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். ஒரே பகுதியில் மூன்று வீடுகளில் 15 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருடுபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடுபோன பொருட்களின் மதிப்பு 7 லட்சம் ரூபாய் ஆகும்.






      Dinamalar
      Follow us