/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடத்தில் 1.75 லட்சம் கன அடி நீர் திறப்பு சிதம்பரம் அருகே 2 கிராமங்களில் வெள்ளம்
/
கொள்ளிடத்தில் 1.75 லட்சம் கன அடி நீர் திறப்பு சிதம்பரம் அருகே 2 கிராமங்களில் வெள்ளம்
கொள்ளிடத்தில் 1.75 லட்சம் கன அடி நீர் திறப்பு சிதம்பரம் அருகே 2 கிராமங்களில் வெள்ளம்
கொள்ளிடத்தில் 1.75 லட்சம் கன அடி நீர் திறப்பு சிதம்பரம் அருகே 2 கிராமங்களில் வெள்ளம்
ADDED : ஆக 04, 2024 04:22 AM

சிதம்பரம்: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை வழியாக நேற்று முன்தினம் அதிகாலை கொள்ளிடம் கீழணைக்கு வந்த தண்ணீர், அணை பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்து அதிகரிக்கவே, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு நேற்று மாலை 1.75 லட்சம் கன அடியாக உயர்ந்தது. இதனால், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டது.
இதனால் கொள்ளிடக் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம், வெள்ள பாதிப்பு ஏற்படும் கிராமங்களான பெராம்பட்டு, கீழகுண்டலபாடி, திட்டுகாட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழ திருக்கழிப் பாலை, மேல திருக்கழிப்பாலை, எருக்கன்காட்டுபடுகை, வீரன் கோவில் திட்டு கிராம மக்களை பாதுகாப்பாக புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகள் வாகனங்கள் மூலம் மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டது.
மாலை வரை பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்றாலும், கிராமத்தின் தாழ்வான பகுதிகளில், 1 அடி வரை தண்ணீர் புகுந்துள்ளது. இது படிப்படியாக உயரும் என்பதால் தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், திட்டுக்காட்டூர் கிராமங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று படகில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ள கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது சப் கலெக்டர் ராஷ்மிராணி, தாசில்தார் ஹேமா ஆனந்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.