தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தம்பதியை தாக்கிய 2 பேர் கைது

தம்பதியை தாக்கிய 2 பேர் கைது

தம்பதியை தாக்கிய 2 பேர் கைது


ADDED : ஜூலை 03, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: கணவன் மனைவியை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

 நெல்லிக்குப்பம் அடுத்த மருதாட்டை சேர்ந்தவர் கண்ணப்பன்,38; இவரது மனைவி சாந்தி,28; இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். கண்ணப்பனின் தங்கை ஜீவிதாவை அவரது கணவர் திருமால் குடிபோதையில் அடித்தார்.

 இதை பார்த்த கண்ணப்பன், திருமாலை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த, திருமால் உறவினர்கள் 5 பேர் கண்ணப்பனையும் அவரது மனைவி சாந்தியையும் கடையில் புகுந்து தாக்கினர்.

 காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பிரதியுமேனன்,24; மற்றும் ஸ்ரீநாத்,25; ஆகியோரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us