ADDED : மே 11, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு ராமாபுரம் வீரன் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த ரவி மகன் வல்லரசு, 27; சம்பத் மகன் வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து மொபைல்போன், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
