ADDED : ஏப் 26, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நெல்லிக்குப்பத்தில் கஞ்சா பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரவு 7:00 மணிக்கு வைடிப்பாக்கம் ஐயனார் கோவில் அருகே, கஞ்சா பதுக்கி விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கென்னடி மகன் சந்துரு, 23; கீழ்கவரப்பட்டு ஏசுதாஸ் மகன் இன்பத்தமிழன், 22; ஆகிய இருவரையும் கைது செய்து, 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

