ADDED : ஜூலை 03, 2026 09:23 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி போலீசார் குழுவினர் நேற்று குறிஞ்சிப்பாடி மற்றும் ஆடூர் அகரம் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது சிலர் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.
மதுபாட்டில் விற்ற குறிஞ்சிப்பாடியை சேர்ந்த குமரவேல், 54; ஆடூர் அகரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (எ) ஜெயபிரகாஷ், 21; ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரிடமிருந்து, 34 மதுபாட்டில்கள், ரூ.,1860 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
