ADDED : ஜூலை 09, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டையில் கஞ்சா விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் ரம்ஜான் தைக்கால் சையத் அப்துல்காதர் மகன் முகமது மருவான் 25; புவனகிரி தாமரைக்குளம் மேலத்தெரு சிகாமணி மகன் விக்னேஷ் 23;
இந்த இருவரும் லால்பேட்டை, தைக்கால் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., மற்றும் போலீசார் நேற்று காட்டுமன்னார்கோவில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது லால்பேட்டை, வாரச்சந்தை அருகே இருவரும் கஞ்சா விற்பனை செய்ததை கண்டறிந்து மடக்கிப்பிடித்து கைது செய்து, அவர்களிடம் இருந்த, 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
