/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
2 வீடுகளில் புகுந்த நல்ல பாம்புகள் மீட்பு
/
2 வீடுகளில் புகுந்த நல்ல பாம்புகள் மீட்பு
ADDED : மார் 29, 2024 05:40 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் இரண்டு வீடுகளில் புகுந்த நல்ல பாம்புகளை மீட்கப்பட்டு, காப்பு காட்டில் விடப்பட்டது.
நெல்லிக்குப்பம், ஒற்றைவாடி தெருவை சேர்ந்தவர் முஹம்மது. இவரது வீட்டில் நேற்று அவரது குழந்தை துாங்கி கொண்டிருந்தது.
அப்போது வீட்டிற்குள் புகுந்த பாம்பு குழந்தை துாங்கிக் கொண்டிருந்த இடத்துக்கு அருகே சென்றது.
அதைபார்த்த வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை துாக்கிக் கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
இது குறித்து வன விலங்கு ஆர்வலர் நெல்லிக்குப்பம் உமர் அலிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து சென்று ஏழு அடி நீள நல்ல பாம்பை பிடித்தார்.
அதே போல், வாழப்பட்டில் ராஜா என்பவரின் வீட்டிற்குள் புகுந்த ஐந்து அடி நீள நல்ல பாம்பையும் பிடித்தார். இரண்டு பாம்புகளையும் அரசு காப்பு காட்டில் விட்டார்.
வெய்யில் அதிகமாக இருப்பதால் குளிர்ச்சியான இடங்களை தேடி பாம்புகள் வர துவங்கியுள்ளன என, வன ஆர்வலர் தெரிவித்தார்.

