ADDED : ஆக 25, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே இரண்டு வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின.
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் வேலு, விவசாயி. நேற்று மதியம் மர்மமான முறையில் வேலுவின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் தப்பினர். காற்று பலமாக வீசியதால் பக்கத்தில் இருந்த அவரது அண்ணன் அன்பு என்பவரது வீடும் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
இதில் இரண்டு வீடுகளும் முழுமையாக எரிந்து, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின.