/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
2 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது: 4 பேர் ஓட்டம்
/
2 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது: 4 பேர் ஓட்டம்
ADDED : ஆக 08, 2024 12:18 AM
கடலுார் : கடலுாரில், பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடி 4 பேரை தேடி வருகின்றனர்.
எஸ்.பி.,யின் சிறப்பு படை போலீசார் நேற்று கடலுார் முதுநகர் மோகன் சிங் வீதியில் ரோந்து சென்றனர். அப்போது, ரூபிணி என்பவர் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சாலக்கரையை சேர்ந்த சந்திரசேகர், 49; என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், திருப்பாதிரிபுலியூர் இந்திரா நகர் அரிகிருஷ்ணன் மகன் முனுசாமி, அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, மோகன்சிங் தெரு ரவிக்குமார் மகன் ரூபினி, செல்வம் ஆகியோர் கூட்டாக கடலுார் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள முனுசாமி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.