/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பஸ் மோதி 2 பேர் பலி; குள்ளஞ்சாவடியில் பரிதாபம்
/
அரசு பஸ் மோதி 2 பேர் பலி; குள்ளஞ்சாவடியில் பரிதாபம்
அரசு பஸ் மோதி 2 பேர் பலி; குள்ளஞ்சாவடியில் பரிதாபம்
அரசு பஸ் மோதி 2 பேர் பலி; குள்ளஞ்சாவடியில் பரிதாபம்
ADDED : செப் 02, 2024 06:46 AM
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற இருவர் இறந்தனர்.
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் ஏழைமுத்து, 60; ஜோன்தாஸ், 45. இருவரும், குள்ளஞ்சாவடிக்கு நேற்று பைக்கில் சென்று விட்டு இரவு 9:00 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை ஜோன்தாஸ் ஓட்டினார்.
கடலுார் - விருத்தாசலம் சாலை, கருமாச்சிப்பாளையம் சந்திப்பில் பைக்கில் திரும்பியபோது, கடலுாரில் இருந்து வடலுார் நோக்கி சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த ஏழைமுத்து, ஜோன்தாஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.