/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுகுடிக்க கப் விற்பனை பண்ருட்டியில் 2 பேர் கைது
/
மதுகுடிக்க கப் விற்பனை பண்ருட்டியில் 2 பேர் கைது
ADDED : ஆக 07, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : பண்ருட்டியில், டாஸ்மாக் கடை அருகே குடிபிரியர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் கப் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி மணி நகர் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் இரண்டு உள்ளன.
இதன் அருகே 100 மீட்டர் சுற்றளவில் மது குடிப்பவர்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்பது விதி. ஆனால், பண்ருட்டி டாஸ்மாக் அருகிலேயே ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த பிரபாகரன்,30, குணசேகரன்,42 ; இருவரும் பெட்டிக்கடை வைத்து, குடிப்பிரியர்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் கப் விற்பனை செய்தனர்.
அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.