/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
/
மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூன் 20, 2024 03:52 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம் அருகே ஆலடி அடுத்த கொக்காம்பாளையம் கிராமத்தில், கடந்த மே மாதம் 29ம் தேதி சட்டவிரோதமாக ஜே.சி.பி., மூலம் கிராவல் மண் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஆலடி போலீசார் விரைந்து சென்று குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 30, கொக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, 35; திலீப்குமார்; பாலமுருகன், 30; ரமேஷ்; பிரபாகரன், 18; ஜெய்சங்கர் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ஜே.சி.பி., மூன்று டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், பாலகிருஷ்ணன், இளையராஜா ஆகியோரின் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, அவர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி, எஸ்.பி., ராஜாராம், கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று உத்தரவிட்டார்.
உத்தரவிற்கான நகல், சிறையில் உள்ள பாலகிருஷ்ணன், இளையராஜாவிடம் போலீசார் வழங்கினர்.