ADDED : ஆக 31, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கீரப்பாளையத்தில் மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி, கீரப்பாளையம் பாலம் பகுதியில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், புவனகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று, மது விற்பனை செய்த சிதம்பரம் கொத்தங்குடித் தெரு கிருஷ்ணராஜ், 32; வினோத்ராஜ், 28, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.