/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெட்டி கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
/
பெட்டி கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
பெட்டி கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
பெட்டி கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
ADDED : செப் 07, 2024 06:38 AM
சிதம்பரம் : சிதம்பரத்தில் பெட்டி கடைக்காரரிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் வாகிச நகர் பகுதியைச் சேர்ந்தவர் சர்புதீன், 62; இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.
சிதம்பரம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராகுல், 28; கந்தமங்கலம் செல்லதுரை மகன் மூவேந்தன், 22; பழைய புவனகிரி சுரேந்தர் மகன் கவுசிலன், 23; மீதிகுடி பாக்கியராஜ் மகன் தேவராஜ், 17; இவர்கள் 4 பேரும், சர்புதீன் கடை முன் நின்று கொண்டு, கையில் கத்தியுடன், ஆபாசமாக பேசினர். தட்டிக்கேட்ட சர்புதீனை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சர்புதீன் அளித்த புகாரின் பேரில், ராகுல், கவுசிலன், மூவேந்தன், தேவராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து ராகுல், கவுசிலன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முவேந்தன், தேவராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
கத்தியை காட்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.