ADDED : ஆக 27, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : மங்கலம்பேட்டை பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று எம்.அகரம், பள்ளிப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எம்.அகரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 44; மங்கலம்பேட்டை புது நெசவாளர் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார், 55; ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது.
உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.