அரசு அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
அரசு அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 06, 2026 08:23 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: அரசு அனுமதியின்றி, வண்டல் மண் ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பூவாலை பகுதியில் இருந்து அரசு அனுமதியின்றிடிராக்டரில் வண்டல் மண் ஏற்றிச்செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்றுமுன்தினம் தச்சக்காடு கிராமத்தில், வி.ஏ.ஓ., செந்தமிழ்ச்செல்வி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வண்டல் மண் ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்களைநிறுத்தினார். வி.ஏ.ஓ., வை பார்த்ததும், டிராக்டரில் இருந்த டிரைவர்கள் தப்பியோடிவிட்டனர்.இதுகுறித்து, வி.ஏ.ஓ., செந்தமிச்செல்வி கொடுத்த புகாரின்பேரில்,பரங்கிப்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திருமேனி வழக்குப் பதிந்து, இரண்டுடிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
