தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 25 கண்மதகு ஷட்டர் பாலத்தின் தடுப்பு இடிந்து சேதம்

25 கண்மதகு ஷட்டர் பாலத்தின் தடுப்பு இடிந்து சேதம்

25 கண்மதகு ஷட்டர் பாலத்தின் தடுப்பு இடிந்து சேதம்


ADDED : ஜூலை 16, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 09:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு, 25 கண்மதகு குறுகிய  ஷட்டர் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்துள்ளதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே, 25 கண்மதகு வடிகால் வாய்க்கால் குறுகிய ஷட்டர் பாலம் கட்டப்பட்டு, 90 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.இந்த பாலத்தில், தென்மாவட்டங்கள், வடமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், கனரக டிப்பர், டாரஸ் லாரிகள், டூரிஸ்ட் பஸ்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று இரவு பகல் பாராமல் சென்று வருகின்றன.

மேலும், இந்த இறுகிய பாலத்தில் கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் கடந்த செல்லமுடியாத வகையில் உள்ளதால் இருசக்கர வாகனங்கள் மட்டுமே கடந்து செல்லமுடிகிறது. இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் கனரக வாகனங்கள் பாலத்தினை கடக்கும்போது தடுப்பு சுவர்களில் உரசி  சேதமடைவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலத்தின் தடுப்பு சுவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இடிந்து சேதமானதை தொடர்ந்து மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.அதன்பிறகு பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் ஓரத்தில் செல்லும்போது மணல் மூட்டைகளில் சிக்கி விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.எனவே சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து உடைந்து சேதமான பாலத்தின் தடுப்பு சுவரை விரைந்து சீரமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us