/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் ஸ்கேட்டிங் போட்டி 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
/
கடலுாரில் ஸ்கேட்டிங் போட்டி 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
கடலுாரில் ஸ்கேட்டிங் போட்டி 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
கடலுாரில் ஸ்கேட்டிங் போட்டி 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
ADDED : மார் 06, 2025 01:52 AM
கடலுார்: கடலுார் மற்றும் புதுச்சேரி வட்டங்களை சேர்நத ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகளுக்கான ஸ்கேட்டிங் போட்டி, கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கடலுார் மாவட்ட ஸ்பீட் ஸ்கேட்டிங் தலைவர் ராமலிங்கம் சாலையில் நடந்த போட்டியை துவக்கி வைத்தார். கல்லுாரி உள்ளரங்கத்தில் நடந்த வட்ட தொடர் ஸ்கேட்டிங் போட்டியை கல்லுாரி செயலாளர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். போட்டியில் 250க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாலை சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற கடலுார் மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுவிழா நடந்தது. அரிஸ்டோ பள்ளி உரிமையாளர் சிவக்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீரர்களை பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியாளர் அமிழ்தன் நன்றி கூறினார். மாவட்ட ஸ்கேட்டிங் சங்க செயலார் சந்திரமோகன் பால்ராஜ், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.