/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் 2ம் நாளாக போராட்டம்
/
என்.எல்.சி.,யில் 2ம் நாளாக போராட்டம்
ADDED : செப் 02, 2024 11:00 PM

மந்தாரக்குப்பம் : என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு நேற்று இரண்டாவது நாளாக தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் 18 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது என்.எல்.சி.,யில் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் புதியதாக காண்டிராக்ட் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் வேலை செய்த ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் காலை இரண்டாம் சுரங்கம் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி., அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.அதையடுத்து நேற்று காலை என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் நிர்வாக அலுவலகத்தில், தலைமை பொது மேலாளர் சஞ்சீவ் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது, அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. அதை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் 12:00 மணியளவில் இருந்து இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு மாலை 6:00 மணிவரை சாலையில் அமர்ந்து கடும் வெயிலில் தர்ணா வில் ஈடுபட்டனர்.