/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3 ஆம்னி பஸ்கள் மோதல் வேப்பூரில் 35 பேர் காயம்
/
3 ஆம்னி பஸ்கள் மோதல் வேப்பூரில் 35 பேர் காயம்
ADDED : பிப் 27, 2025 01:53 AM
3 ஆம்னி பஸ்கள் மோதல்
வேப்பூரில் 35 பேர் காயம்
வேப்பூர், பிப். 27-
சென்னை, கோயம்பேட்டில் இருந்து தனியார் ஆம்னி பஸ், 30 பயணியருடன், நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நேற்று அதிகாலை 2:00 மணியளவில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், வேப்பூர் மேம்பாலம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது, அவ்வழியே பின்னால் வந்த மற்ற இரண்டு தனியார் ஆம்னி பஸ்கள், எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து இந்த பஸ்சுடன் மோதின. இதில், மூன்று ஆம்னி பஸ்களிலும் பயணித்தவர்களில், 35 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
அனைவரும் வேப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதனால் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
=================