/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு புகுந்து திருட்டு மருதுாரில் 3 பேர் கைது
/
வீடு புகுந்து திருட்டு மருதுாரில் 3 பேர் கைது
ADDED : மார் 08, 2025 02:07 AM

புவனகிரி: மருதுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புவனகிரி தாலுகா, மருதுார் அடுத்த மஞ்சக்கொல்லை பெரியத்தெருவைச் சேர்ந்த செல்வராசு மனைவி சாவித்திரி. கடந்த 27ம் தேதி இரவு 8.00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.
மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 4 காமாட்சி விளக்கு, சில பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
நேற்று முன் தினம் சப்இன்ஸ்பெக்டர் பொன்மகரம் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
இதில் பின்னலுார் பெரியத்தெருவைச் சேர்ந்த சூர்யா (எ) செல்வகாந்தி, 25; செல்வகணபதி, 29; பிரவின், 27; என்பதும், மூவரும் மஞ்சக்கொல்லை செல்வராஜ் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.