ADDED : மே 12, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ராஜா தியேட்டர் அருகில் ராணிப்பேட்டை அருண்குமார்,19;ஆராய்ச்சிக்குப்பம் சச்சின்,20;நெல்லிக்குப்பம் பிரகதீஷ்,24; ஆகிய 3 பேரும் கஞ்சா விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தனர்.நடுவீரப்பட்டு போலீசார் 3 பேரையும் கைது செய்து,அவர்களிடமிருந்த 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
