sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 2 கிலோ பறிமுதல்

/

கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 2 கிலோ பறிமுதல்

கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 2 கிலோ பறிமுதல்

கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 2 கிலோ பறிமுதல்


ADDED : ஜூலை 23, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : பண்ருட்டியில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பண்ருட்டி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார், கும்பகோணம் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த ஒரு ஓட்டலிலில் இருந்து வெளியே வந்த 3 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த மூர்த்தி மகன் மிதுன்ராஜ், 22; பண்ருட்டி ஆண்டிக்குப்பம் சையது மகன் சையதுசலீம், 21; விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் சங்கர்குமார் மகன் பிரியதர்ஷன், 21; என தெரிந்தது. இவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் சென்னையில் தங்கி பணியாற்றியபோது நண்பர்களாகி, கஞ்சா கடத்தில் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பண்ருட்டி மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us