/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
களைக்கொல்லி மருந்தை குடித்த 3 ஆடுகள் சாவு
/
களைக்கொல்லி மருந்தை குடித்த 3 ஆடுகள் சாவு
ADDED : ஆக 18, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே வயலில் அடிக்க கலந்து வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்த மூன்று ஆடுகள் இறந்தன.
சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் அடுத்த வயலாமூரை சேர்ந்தவர் கணேசன் மனைவி ராஜகுமாரி,68. இவர் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள், அதே பகுதியைச் சேர்ந்த நமச்சிவாயம் என்பவர், வயலில் அடிப்பதற்கு வாளியில் கரைத்து வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை, தண்ணீர் என நினைத்து குடித்துள்ளன.
இதனால், மூன்று ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தது. மேலும் மூன்று ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

