ADDED : ஜூலை 14, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், சி.என்.பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சி.என்.பாளையம் புத்திரன்குப்பம் கிராவல் குவாரியில், பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு, சி.என்.பாளையம் மாதாகோவில் தெருவை சேர்ந்த அருண்குமார்,36; நடுவீரப்பட்டு சந்தோஷ்நகர் சுரேஷ்,34; குமளங்குளம் மாரியம்மன் கோவில்தெரு இளவரசன்,39;ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது.
போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
