/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது: பைக் பறிமுதல்
/
கடலுாரில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது: பைக் பறிமுதல்
கடலுாரில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது: பைக் பறிமுதல்
கடலுாரில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது: பைக் பறிமுதல்
ADDED : ஆக 09, 2024 04:54 AM
கடலுார்: கடலுார் அருகே தொண்டமாநத்தத்தில் நள்ளிரவில் ஆடுகள் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த தொண்டமாநத்தம் பொட்டவெளியை சேர்ந்தவர் பழனிவேல், 48; விவசாயி. இவரது வீட்டில் கட்டியிருந்த ஆடுகள் நேற்று முன்தினம் இரவு திருடுபோனது.
இந்நிலையில் கடலுார் முதுநகர் போலீசார் மணிகூண்டு அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி 3 பேர், பைக்கில் ஆடுகள் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
அவர்களை நிறுத்தி விசாரித்ததில், குறிஞ்சிப்பாடி அடுத்த ராமநாதன்குப்பம் முத்துக்குமரன் மகன் புருஷோத்தமன், 25; சின்னகாரைக்காடு ஜெயராமன் மகன் ஜெகதீஷ் , 22; சேடப்பாளையம் நாகம்பாள் பேட்டை சுப்ரமணி மகன் பிரகாஷ், 19; என்பதும், தொண்டமாநத்தத்தில் பழனிவேல் வீட்டில் ஆடுகளை திருடி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து புருஷோத்தமன், ஜெகதீஷ், பிரகாஷ் மூவரையும் கைது செயதனர். 5 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.