/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 31 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை சிவராத்திரியை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை

ADDED : பிப் 28, 2025 05:50 AM

விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் அடுத்தடுத்த இரு வீடுகளில் 31 சவரன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பூதாமூர், பூந்தோட்டம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்.
நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக் கொண்டு விருத்தாசலம் கோவில்களில் நடந்த சிவராத்திரி விழாவிற்கு குடும்பத்துடன் சென்றார்.
நேற்று விடியற்காலை வீட்டிற்கு வந்தபோது, தெருக்கதவு பூட்டு உடைந்திருந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பிரோ உடைந்திருந்தது. அதில் வைத்திருந்த 25 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் திருடு போயிருந்தது.
அதேபோல், சிவராத்திரி விழாவிற்கு சென்ற அருகில் உள்ள சங்கர் மனைவி சுமதி வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 6 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, அடுத்தடுத்த இரு வீடுகளில் 31 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.