/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : செப் 15, 2024 06:54 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் தலைமையில், ஏட்டு ராஜசேகர் உள்ளிட்ட போலீசார் விருத்தாசலம் பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வடக்கு பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீட்டில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமரவேல், 40, என்பதும், வாடகை வீடு எடுத்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்து, நாமக்கல் மாவட்டம் பகுதிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. 75 மூட்டைகளில் தலா 50 கிலோ என 3.5 டன் ரேஷன் அரிசியை நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.