/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலி அடையாள அட்டை பயன்படுத்திய அரசு கல்லுாரி மாணவர்கள் 4 பேர் 'சஸ்பெண்ட்'
/
போலி அடையாள அட்டை பயன்படுத்திய அரசு கல்லுாரி மாணவர்கள் 4 பேர் 'சஸ்பெண்ட்'
போலி அடையாள அட்டை பயன்படுத்திய அரசு கல்லுாரி மாணவர்கள் 4 பேர் 'சஸ்பெண்ட்'
போலி அடையாள அட்டை பயன்படுத்திய அரசு கல்லுாரி மாணவர்கள் 4 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 15, 2024 05:16 AM
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினத்தில் அரசு கல்லுாரியில், மாணவர்கள் சீருடை அணிந்தும், அடையாள அட்டை மற்றும் தலைமுடி சரியான முறையில் வெட்டப்பட்டு வர வேண்டும் என கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் அறிவுறுத்தினார். மாணவர்கள் இந்த நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுகின்றனரா எனவும், பேராசிரியர்கள் மூலம் கண்காணித்து வந்தார்.
இந்நிலையில் கல்லுாரிக்கு ஏராளமான மாணவர்கள் தலைமுடி சரியான முறையில் வெட்டாமல் வந்தது தெரியவந்தது. அவர்களின் அடையாள அட்டையை பெற்றுக்கொண்ட பேராசிரியர்கள், தலைமுடியை சரியாக வெட்டிக்கொண்டு வந்து அடையாள அட்டை பெற்று செல்லும்படி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் முடி வெட்டாமல், நேற்று அடையாள அட்டை அணிந்து கல்லுாரிக்கு வந்துள்ளனர். இதைக்கண்ட
பேராசிரியர்கள், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை செய்தனர். அதில், போலியாக அடையாள அட்டை தயார் செய்து அணிந்து வந்தது தெரியவந்தது. அதையடுத்து, 4 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து, கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கல்லுாரி நிர்வாக கட்டுப்பாட்டை மீறும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பேராசிரியர்கள் காரணமின்றி கல்லுாரியில் பாடம் எடுக்காமல் இருந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.