/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
4 பள்ளி மாணவிகள் மாயம் கடலுாரில் பரபரப்பு
/
4 பள்ளி மாணவிகள் மாயம் கடலுாரில் பரபரப்பு
ADDED : செப் 11, 2024 01:48 AM

கடலுார் கடலுாரில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 9ம் வகுப்பு பயிலும் 14 வயதுடைய மாணவிகள் 3 பேர் நேற்று மாலை பள்ளி முடிந்து வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பள்ளி விடுதியில் தங்கி 9ம் வகுப்பு பயிலும் புவனகிரி மாணவியும் விடுதிக்கு திரும்பவில்லை. 4 மாணவிகளும் வெவ்வேறு வகுப்புகளை சேர்ந்தவர்கள்.
அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் பல இடங்களில் தேடியும் 4 மாணவிகளும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவு 9:00 மணிக்கு பள்ளிக்கு திரண்டு வந்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி., பிரபு மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மாணவிகள் நால்வரும் சிதம்பரத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இரவு 11.30 மணியளவில் நால்வரையும் மீட்டு, கடலுார் அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர்.