ADDED : செப் 14, 2024 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், மந்திப்பாளையம் ஓடையில் நேற்று காலை துார்வாரும் பணியில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.
புதர்மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்தபோது 'கதண்டு' எனும் விஷ வண்டுகள் வெளியேறி பணியில் ஈடுபட்டவர்களை கடித்தன. இதில், 37 முதல் 65 வயது வரையிலான ஐந்து பெண்கள் மயக்கமடைந்தனர்.
உடனடியாக அனைவரும், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.