/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 52 பேர் தேர்வு
/
மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 52 பேர் தேர்வு
மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 52 பேர் தேர்வு
மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 52 பேர் தேர்வு
ADDED : பிப் 28, 2025 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மாநில அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கடலுார் வீரர்கள் 52 பேர் தேர்வாகியுள்ளனர்.
கடலுார் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. சின்னகங்கணாங்குப்பத்தில் நடந்த போட்டிக்கு, மாவட்ட சதுரங்க கழக கன்வீனர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் குமணன் ஆகியோர் மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வான 52 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
இந்த வீரர்கள், வரும் மார்ச் 3ம் தேதி கிரான் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா மற்றும் இன்டர்நேஷனல் மாஸ்டர் முருகன் ஆகியோருடன் விளையாட உள்ளனர்.