ADDED : மார் 28, 2024 11:15 PM
கடலுார்: மாவட்டத்தில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத 55 லட்சத்து 91 ஆயிரத்து 137 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு 27 குழுக்கள் மற்றும் 27 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி முதல், நேற்று வரை சிதம்பரம் சட்டசபை தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 55 லட்சத்து 91 ஆயிரத்து 137 ரூபாய், 2 லட்சத்து 45 ஆயிரத்து 767 ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில், ஆவணங்களை ஒப்படைத்ததால் உரியவர்களிடம் 53 லட்சத்து 13 ஆயிரத்து 637 ரூபாய் ரொக்கம், 2 லட்சத்து 34 ஆயிரத்து 518 ரூபாய் பரிசுப் பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. காவல் துறை சார்பில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 853 ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள், சாராயம், 24 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

