ADDED : மார் 02, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 70 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கம்மாபுரம் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில் எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கோ.ஆதனுார் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், 41; என்பவரது மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 70 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து கம்மாபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, சீனிவாசனை கைது செய்தனர்.