/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பறக்கும் படை சோதனையில் ரூ.7.82 லட்சம் சிக்கியது
/
பறக்கும் படை சோதனையில் ரூ.7.82 லட்சம் சிக்கியது
UPDATED : மார் 22, 2024 12:34 PM
ADDED : மார் 22, 2024 12:34 AM

கடலுார் மாவட்டத்தில் 6 இடங்களில் பறக்கும்படை வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 7 லட்சத்து 82 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலுார் அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தில், சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் ஜெயசெல்வி தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த புதுச்சேரி வள்ளலார் வீதியை சேர்ந்த சுரேந்திரபால், 40; என்பவர், ஆவணங்கள் இன்றி, 78 ஆயிரம் ரூபாய் எடுத்து சென்றது பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, பச்சையாங்குப்பம் வழியாக பைக்கில் வந்த கடலுார் பீச் ரோட்டை சேர்ந்த குமரேசன் என்பவரிடம் 75 ஆயிரம் ரூபாயை, பறக்கும்படை அலுவலர் ஸ்ரீவித்யா  பறிமுதல் செய்தார்.
பண்ருட்டி
நெய்வேலி ஆர்ச்கேட்டில் நேறறு காலை 11:30 மணியளவில் தேர்தல் கண்காணிப்பு குழு கார்த்திக் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நெய்வேலி வட்டம் -6 சேர்ந்த நந்தா என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
வடலுார்
குறிஞ்சிப்பாடி அருகே வெ.காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று காலை துணை மாநில வரி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர்,  வசனாங்குப்பத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவர், பைக்கில் ஆவணங்களின்றி எடுத்து வந்த 1லட்சத்து 79 ஆயிரம் பணத்தை, பறிமுதல் செய்தனர். இதேபோல், நிலையான தேர்தல் காண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
சிறுபாக்கம்
விருத்தாசலம் - சேலம் சாலையில், சிறுபாக்கம் அடுத்த அடரியில் தோட்டக்கலை துறை அலுவலர் பவதாரிணி தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், கடலுார் திருவந்திபுரம் அடுத்த பில்லாலி தொட்டியைச் சேர்ந்த கந்தவேல் என்பவரிடம் 2 லட்சத்து 50ஆயிரம் ஆவணங்கள் இன்றி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டு பறிமுதல் செய்யப்பட்து.
மாவட்டத்தில் நேற்று 6 இடங்களில் 7 லட்சத்து 82 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
-நமது நிருபர்கள்-

