sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேன் கவிழ்ந்து விபத்து விருதையில் 9 பேர் தப்பினர்

/

வேன் கவிழ்ந்து விபத்து விருதையில் 9 பேர் தப்பினர்

வேன் கவிழ்ந்து விபத்து விருதையில் 9 பேர் தப்பினர்

வேன் கவிழ்ந்து விபத்து விருதையில் 9 பேர் தப்பினர்


ADDED : ஆக 29, 2024 07:40 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்,: விருத்தாசலம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், வேனில் பயணம் செய்த 9 பேர் தப்பினர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒருவால் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று விருத்தாசலம் வழியாக வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு வேனில் சென்றார். நேற்று காலை 9:00 மணியளவில் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமம் அருகே வேன் சென்றபோது,முன்னால் சென்ற ஜீப் மீது மோதாமல் இருக்க, வேன் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி வேன் சாலையோரம் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 9 பேரும் லேசான காயதத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் காயமடைந்தவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us