/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
348 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது
/
348 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது
ADDED : செப் 05, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மயிலாடுதுறை மாவட்ட மீனவர் வலையில், 348 கிலோ எடையுள்ள கோட்டான் திருக்கை மீன் சிக்கியது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பெருமாள் பேட்டை மீனவர்கள், நேற்று ஆழ்கடலில் மீன் பிடித்துள்ளனர். அப்போது, 348 கிலோ எடையுள்ள மெகா சைஸ் கோட்டான் திருக்கை மீன் மீனவர்கள் வலையில் சிக்கியது. இந்த மீனை பிடித்து படகில் ஏற்ற முடியாததால், கயிறு கட்டி, கடலுார் முதுநகர் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு, வியாபாரியிடம் அந்த மீனை விற்பனை செய்தனர். இதையடுத்து, கோட்டான் திருக்கை மீன், கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.