/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பெண் கருப்பையில் 5.1 கிலோ கட்டி அகற்றம்

ADDED : மே 01, 2024 07:10 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை நகர், மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பெண்ணின் கருப்பையில் இருந்த 5 கிலோ எடையுள்ள கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் கடலுார் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது.
இம்மருத்துவமனையில் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கருப்பையில் உள்ள கட்டி பாதிப்புக்காக, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த 27-ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு வலது பக்க கட்டிக்கான அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். இதில் 5.1 கிலோ எடைகொண்ட கருப்பை கட்டியை மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகமாக அகற்றினர்.