/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணை தாக்கிய நால்வர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய நால்வர் மீது வழக்கு
ADDED : மே 01, 2024 07:09 AM
விருத்தாசலம் : நிலப் பிரச்னையில் பெண்ணை தாக்கிய நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் ஆலடி ரோடு, காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் இளையராஜா மனைவி விஜயசாந்தி; மணிவண்ணன் மனைவி தங்கம்.
இருவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில், தங்கம், மகன் வெற்றிச்செல்வன், மகள் மதுமிதா, உறவினர் அமுதா ஆகியோர் விஜயசாந்தியை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் தங்கம், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.