/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'ஜப்தி' செய்த வீடு ஆக்கிரமிப்பு தம்பதி மீது வழக்கு பதிவு
/
'ஜப்தி' செய்த வீடு ஆக்கிரமிப்பு தம்பதி மீது வழக்கு பதிவு
'ஜப்தி' செய்த வீடு ஆக்கிரமிப்பு தம்பதி மீது வழக்கு பதிவு
'ஜப்தி' செய்த வீடு ஆக்கிரமிப்பு தம்பதி மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 09, 2024 04:42 AM
திருபுவனை: திருபுவனை அருகே வங்கிக் கடனுக்காக கோர்ட் மூலம் ஜப்தி செய்யப்பட்ட வீட்டின் சுவரை உடைத்து, வசித்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருபுவனை பாளையத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி பார்வதி. இவர்கள் கண்டமங்கலம் சென்ட்ரல் பாங்கில் கடன் வாங்கி வீடு கட்டினர்.
கடனை திருப்பி செலுத்தாத நிலையில், அதனை மறைத்து அதேப் பகுதியை சேர்ந்த நடராஜன் - செங்கேணி தம்பதியிடம் விற்றனர்.
இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாததால், வங்கி அதிகாரிகள் கோர்ட் உத்தரவை பெற்று வீட்டை ஜப்தி செய்து 'சீல்' வைத்து, ஏலம் விட்டனர். வீட்டை, அதேபகுதியை சேர்ந்த புருேஷாத்தமன் ஏலம் எடுத்தார்.
இந்நிலையில், ஏற்கனவே வீட்டை வாங்கிய நடராஜன் - செங்கேணி தம்பதியினர் கடந்த 6ம் தேதி வீட்டின் சுவரை உடைத்து, உள்ளே நுழைந்து வசித்து வருகின்றனர்.
இதனை அறிந்த வீட்டை ஏலம் எடுத்த புருஷோத்தமன், வீட்டை காலி செய்து தருமாறு வங்கி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து வங்கி மேலாளர் ரவீந்திரகுமார்லால் கொடுத்த புகாரின் பேரில், செங்கேணி - நடராஜன் தம்பதி மீது திருபவனை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.