/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டெல்டாவில் பொலிவிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
/
டெல்டாவில் பொலிவிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
ADDED : ஆக 04, 2024 12:18 AM
கடலுார்: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், டெல்டா பகுதியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் பொலிவிழந்து காணப்பட்டது.
டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதியில் ஆடிப்பெருக்கை விவசாயிகள், பெண்கள் உற்சாகமாக கொண்டாடுவர். விவசாயம் செழிக்க, காவிரி தாயை வணங்கும் வகையில் மங்கள திருநாளாக கொண்டாடுகின்றனர். ஆறுகளில் புதிய தண்ணீர் வருகைக்கு படித்துறை, மணல் பரப்புகளில் சுமங்கலி பெண்கள் வழை இலையில் படையல் செய்து வழிபடுவர். ஆடிப்பெருக்கு திருநாள் டெல்டா பகுதியில் விமர்சையாக கொண்டாடுவர்.
இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கீழணையில் பிரதான பாசன வாய்க்கால்களில் காலம் கடந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கிராம பகுதிகளில் வாய்க்கால்களில் தண்ணீர் வராமல் வறண்டுக் கிடக்கிறது.
கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராம பகுதி வாய்க்கால்களிலும் தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதியில் ஆடிப்பெருக்கு திருநாள் பொலிவு இழந்து காணப்பட்டது. டெல்டா பகுதியை சேர்ந்தவர்கள் கடலுார் போன்ற கடல் பகுதிக்கு சென்று கொண்டாடினர்.