/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏரியில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
/
ஏரியில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
ADDED : மே 06, 2024 06:06 AM
மந்தாரக்குப்பம், : நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்க சாம்பல் ஏரியில் குளிக்க சென்ற கல்லுாரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நெய்வேலி வடக்குவெள்ளுர் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் மகன் விஷ்வா, 19; இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் ஜெகதீசனுடன் என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலையம் சாம்பல் ஏரியில் குளிக்க சென்றனர்.
ஏரியில் குளித்து கொண்டிருந்த விஷ்வா தீடிரென தண்ணீரில் மூழ்கியதை பார்த்த அவரது நண்பர் ஜெகதீசன் ஊ.மங்கலம் காவல் நிலைத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை ஏரியில் மூழ்கிய விஷ்வாவை தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.
நேற்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுப்பட்டு காலை 10:15 மணியளவில் தண்ணீரில் மூழ்கி இறந்த விஷ்வாவை உடலை மீட்டனர். புகாரின் பேரில ஊ.மங்கலம் போலீசார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கல்லுாரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது